
காதற் பெண்ணே
காதலில் நீ
பூவாயிருப்பின்
உன் வசந்தம் முடிந்ததும்
பொத்தென்று கழன்று விடுவாய்
நீ - இலையாய் இருப்பின்
காற்றின் சலனத்திற்கே
கழன்று விடுவாய்
கனியாய் இருப்பின்
பறவைகளின் சங்கீதத்திற்கே
மயங்கி விடுவாய்
நீ வேராயிருப்பின்
இலையுதிர் காலத்திலும்
இறவாமல்………
உயிராய் இருப்பாய்
--------------------------------------------
காதல் இனிதே....காமத்தின் தீயில் உடல்களை இணைத்துக்கொள்ளும் மேலைத்தேய வாழ்க்கையில் அர்த்தம் யாதுமில்....காதலின் கதகதப்பை கற்றுக்கொள்.....
காதல் இதுதான்.......காதலில் வேராய் இரு நீ வருட்சமாயின் நான் அதன் வேராவேன் இருவர்க்கும் இது வேதம்....உன் இலைகள் உதிரும்போது... நான் உனக்கு உயிர்கொடுப்பேன்... வேராகி இலை போன்று... இடைநடுவில் இன்பம் தீர்ந்து போகையில் இடறிச் செல்லேன் உயிருள்ளவரை உன்னோடு....ஜப்பானில் நடந்த உண்மைச் சம்பவம் இது. வீட்டுக்குக் குடிவந்து புதிதில் ஒரு மரத்தடுப்பில் ஒரே ஒரு ஆணி அடித்திருந்தார் ஒருவர். சிலமாதங்களுக்குப் பின்பு அந்த மரத்தடுப்பின் பின்புறம் பார்க்கும் சந்தர்ப்பம் தவறுதலாகக் கிடைத்தது அப்போது அதிர்ந்து போனார். அந்த தடுப்பில் பின்னால் ஒரு பல்லியின் காலில் ஆணி ஏறியிருந்தது. எங்கும் நகராமல் இத்தனை காலம் இந்தப் பல்லி எப்படி உயிர்வாழ்கிறது? சிறிது நேரம் கவனித்தார்.
எங்கிருந்தோ ஒரு பல்லி வந்து அதன் வாயிலிருந்து உணவை தன் யோடிப்பல்லியான மேற்படி பல்லிக்கு ஊட்டியது. மனிதர்களாயின் என்னை நிம்மதியாக விடு....மீண்டு வரமுடியின் வா.....உன்னை நீயே காப்பாற்ற உனக்கு தெரியாதா....
உண்மைக் காதல்.....காதலில்....பூ வண்டு திணைபேதம் கிடையாது இருவரும் பூவாய் ஒரு செடியில் ஒன்றாய் மலர்ந்து ஒருவர் முகம் பார்த்து ஒன்றாய் மடிவது.
இரண்டு பட்டாம்பூச்சிகள் காதலித்தன. யாருக்கு மற்றவர் மீது காதல் அதிகம் என்பதில் இருவர்க்கும் போட்டி. ஒரு தடாகத்திலிருந்து தாமரையைக் காட்டி "நாளை காலை யார் இதன்மீது முதலில் அமர்கிறார்களோ அவர்களுக்குத்தான் காதல் அதிகம்" என்று தீர்மானித்தன மறுநாள் காலை தாமரை மலர்வதற்கு முன்பாகவே 'படபட' வென சிறகடித்து வந்த ஆண் பூச்சி ஆவலோடு காத்திருந்தது. தாமரை மலர்ந்து அடுத்த வினாடி அதில் அமர்ந்தது அதிர்ந்துபோனது தாமரைக்குள்ளேயே பெண்பூச்சி செத்துக்கிடந்தது. (தன் அன்பை உணர்த்தி முதல்நாள் மாலையே வந்து அமர்ந்து கொண்ட அந்த பட்டாம்பூச்சி தாமரை மூடிக்கொண்டதால் மூச்சுத்திணறி இறந்தது. அந்த பட்டாம் பூச்சிகளின் நேசம்....???)
காதல் இருந்தால்.....உன் வசந்த காலத்தில் - காமம் பூப்பூக்கின்றது உன் இலையுதிர் காலத்திலும் உன்னை இறவாது காத்து நீரூற்றுகிறது காதல் என்னும் வேர்.....
ஒர் தீவில் காதல், காமம், செல்வம், அழகு என்பன இருந்தன. ஒருநாள் அத்தீவு மூழ்கிவிடும் என்று எண்ணி படகுகளைத் தயார் செய்துகொண்டு இவை புறப்பட்டன. காதலிடம் படகில்லை செல்வத்திடம் கேட்டபோது என்னிடம் தங்கம் வெள்ளி இருக்கிறது உன்னைக் கூட்டிச்செல்ல முடியாதென்றது, அழகிடம் கேட்டபோது நீ ஈரமானவள் உன்னால் என் அழகு போய்விடும் என்றது. காமத்திடம் கேட்டபோது அதன் காதில் எதுவும் விழவில்லை கடைசியில் ஒரு படகு காதலின் அருகில் வந்து நின்றது ஏறு என்றது? அதனிடம் காதல் நீ யார்? ஏன் இவ்வளவு கரிசனை என்றது அதற்கு படகு நான்தான் காலம் என்றது. காதலின் முக்கியத்துவத்தை காலம் தான் அறியும்.
வாழ்வுக்கு அர்த்தம் காதல் இராஜதந்திரத்தில் ஊடலில் தோற்றவர் காதலில் வென்றவராவார் தோற்றால் ஒன்றும் குறையாது தோல்வியல்ல அது வெ..ற்...றி அன்பை வழங்கு அள்ளி எதுவுமே குறையாது....காதலி..... காதலி.....ஒன்றும் குறையாது – அப்போது வாழ்வு அர்த்தப்படும்....
கோபம் தவிர்....வாலிப வயதில் காதலி கோபத்தை ரசிப்பது வழமை. 'மெல்லிய ஆண் மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது – முரடா உன்னை ரசித்தேன்' என்பது போலத்தான். இன்னும், 'கோபப்படுவதும் ஒரு தனிக்கலைதான்' என்று செல்லமாக சலித்துக்கொள்கின்ற சினேகிதியை நம்பிக் கோபத்தை ஆண்கள் வளர்த்துக் கொள்கிறார்கள். எனினும் திருமணத்தின் பின் அவரே சரியான சுடுதண்ணி எங்க வீட்டுக்காரர் என்று கவிழ்த்துவிடுவார்கள்.
பொதுவாக... காதலர்கள் சிலவிடயங்களில் வெல்வதாக எண்ணிக்கொண்டு தமது உச்சவலுவைச் செலவிட்டு எதிர்வாதம் செய்வதால்.. பொதுவாக பெண்களே இந்த நிலையைக்குரியவர்கள். குறிப்பிட்ட விடயத்தில் வெற்றி பெறுகின்றனர் என்றும் ஆண்களின் மனதிலிருந்து மிக மிகத் தூரமான ஒரு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் தான் காதல் இரசாயனம் ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறிக்கொண்டு பிரிந்து கொள்கின்றனர். எல்லாவற்றுக்கும் காரணம் விட்டுக்கொடுப்பின்மையேயாகும். எதிர்வாதம் செய்து வெல்வது குறிப்பிட்ட விடயத்தில் மட்டுமே. ஆனால் வாழ்க்கையில் அவர்கட்கு படுதோல்வியே ஏற்படுகின்றது.
உனக்காக நான் ஒற்றைக் குளிர்களியை – நீ பார்த்திருக்க நான் உண்டால் - அது காதல் சர்வாதிகாரம் ஒற்றைக் குளிர்களியை – நீ பாதி நான் பாதி உண்டால் - அது காதல் சமஷ்டி ஒற்றைக் குளிர்களியை நீ உண்ட மீதியை நான் உண்டால் - அது காதல் மாநில சுயாட்சி ஒற்றைக்குளிர்களியை உனக்கும் ஊட்டி நானும் உண்டால் - அது காதல் பேரரசு எப்போதும் எங்கும் எவராலும் ஆளப்படாதது காதல் ஜனநாயகம்
மனசே மனசே காதலில் கட்சிமாறும் ஏதோ....தேடுபவர்கட்கு இம்மியளவும் பிடிப்பதில்லை பொறுப்புக்கள் எனினும் பிடிப்பதே கட்டுப்பாடில்லாத காற்றாய் கதி கெட்டு அலைவதற்கே
காற்றைக் கிழித்துக் கொண்டு காற்றாடிகள் எழுந்து பறந்தன எனினும் காற்றின் மீது ஓர் ஊடலும் தம்மை இறுகப் பிணைத்திருக்கும் நூலின் மீது கோபமும் அவற்றிற்கு இருந்தன.
எங்கள் சுதந்திரத்தை கொடு என்று நூலிடம் சண்டை போட்டன. நூல் மறுத்தபோது அறுத்துக்கொண்ட காற்றாடிகள் சுதந்திரமாய் பறந்து சேற்றிலும் முட்களிலும் தந்திக்கம்பங்களிலும் மாட்டிக்கொள்ளவும் அவற்றுக்கு சுதந்திரம் கிடைத்தது.
சமூகத்தின் அடிப்படை கட்டுப்பாடுகளை மதிக்க மறுக்கும் மனிதர்கள் வாழ்க்கை இப்படித்தான்
நூலறுந்த பட்டம் போல கெட்டுப்போகும்.
அறிமுகம்.... ஏன்டா அழகான பறவைக்கு அறிமுகம் - எதற்கென்று அறிவில்லாமல் வலசை போகும் பறவையில் வாஞ்சை கொள்ளாதே அழகை யாசிக்காதே அதைவிட கற்பையே வந்தி பாதைதோறும் உன்போல் தெருக்கரை பிச்சைக்காரர்கட்கு ...சில்லறையாய் தூவிய பறவையது
வலசை.....காமத்தை அடிப்படையாகக் கொண்டு எழுகின்ற காதல் ஆகாயத்தில் உலாவும் முகில் கூட்டம் போன்றதாகவே இருக்கும். எனினும் அன்பை அடிப்படையாகக் கொண்ட காதல் மிகவும் உறுதியான அத்திவாரத்தை கொண்டதாக அமையும் தொடர்ந்து நிலைக்கும் உயிருள்ளவரை அல்ல.... உலகம் வாழும் வரை.
காதல் ருசி.....காதல் .....யாருமற்ற ஒரு புல்வெளியில் காதலியின் அரவணைப்பு....இலட்சம் படைவீரர் கொண்டு காவல் செய்த உயர் பாதுகாப்பு வலயம்..... மனதில்......
திருட்டு மாங்கனி....திருட்டு மாங்கனி இனிப்பது வெறும் மூடக்கொள்கை விஞ்ஞானம் சொல்கிறது – உன் பதகளிப்பும் குற்ற உணர்வும் உன்னை பரிதவிக்க செய்கிறது...
பொதுவாக தாம்பத்திய வாழ்வில் திருப்திபோதாது என்ற நிலையிலேயே நெறிதவறிய உறவுகளை அமைத்துக் கொள்கின்றனர். எனினும் இவர்களின் உறவின்போதான திருப்தியானது பல காரணிகளினால் எல்லைப்படுத்தப்படுகின்றது. அவர்களின் பதகளிப்பு, பதட்டம், குற்ற உணர்வு, அதீத மதுப்பாவனை போன்றவற்றினால் முழுத்திருப்தியினை அடையத்தவறி விடுகின்றார்கள் (ழுசபயnளைஅ) இது மேலும் அவர்கட்கு மன உளைச்சலை அதிகரிக்கச் செய்கிறது.
காதலில் நீ.....காதற் பெண்ணே.....நீ பூவாய் இருப்பின் - உன் வசந்தம் முடிந்ததும் கழன்று விடுவாய் நீ இலையாய் இருப்பின் காற்றின் சலனத்திற்கே கழன்று விடுவாய் நீ கனியாய் இருப்பின் பறவைகளின் பசிக்கு இரையாகி விடுவாய் நீ வேராக இருப்பின் வாழ்நாள் உள்ள வரை நீ.....
என்னோடு .... எனக்காய்... எனக்கு மட்டும்...
வாலிபம்........ வாழ்வல்ல..... காமத்தை காதல் என்று கனவில்கூட நினையாதே காமம் வேறு காதல் அல்ல காதல் ஒன்றும் அரசியலல்ல சின்னவொரு காரணத்துக்காய் சிறகடித்துப் பறப்பதற்கு உன் வாலிபம் உள்ளவரை தான் (காமத்தின்) உன்சிறகுகள் விரியும் வாலிபம் தீர்ந்த பின் - நீ எண்ணும் வசந்தகாலம் ஓய்ந்திவிடும் காதலித்துப்பார், வாழ்வெல்லாம் வசந்தம் தினந்தோறும் தளிர்விடும்..... முதுமையிலும்முந்நூறு ஆண்டு இளமை வரும்... மேலைத்தேய பாணியிலான வாழ்க்கை முறையானது பெண்களைப் பொறுத்தமட்டில் மிகவும் எல்லைப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது. பெண்களின் பாலியல் தொடர்பான உடல் தொழிற்பாடுகள் நாற்பத்தைந்து வயதை அண்மித்த காலங்களில் எல்லைப்படுத்தப்படுகின்றது. இதனால் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஆண்துணையை தேடும் மேலைத்தேய பாணி வாழ்க்கை முற்றுப்புள்ளியை நோக்கி நகர்வதுடன் இவ்வயது எல்லையின் பின் அவர்கள் தமக்கு அன்பையும் பாதுகாப்பையும் வழங்கக்கூடிய துணையையே எதிர்பார்க்க தொடங்குகின்றார்கள். இவர்களை கவனிக்க குழந்தைகள் கூட இல்லாத நிலையிலும் இவ்வாழ்க்கை முறைக்கு பழகிப்போன ஆண்கள் இனம் யுவதிகளை நாடுவதாலும் இவ்வாழ்க்கை முறையில் வாழ்ந்த பெண்கள் குறிப்பிட்ட வயதெல்லையின் பின் தாமாகவே அனாதைகளாக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு புனர்வாழ்வு கொடுப்பதற்கு எந்த அரசிடமும் உருப்படியான திட்டம் இல்லாததால் மிகக்கொடிய வறுமையிலும் விரக்தியிலும் மீதி வாழ்வில் உழல்கின்றார்கள்.
காதல்விட்டு காதல் மாறும் பெண்ணே – உன்னை ஏற்பவன் கூட உன்னில் எதிர்பார்ப்புடன் தான் இருப்பான் நாளை நீ பறந்து விடுவாய் என்று.....
மிதவைக்காதல் மேலைத்தேய பாணியிலான வாழ்க்கையில் இணையும் பெண்களிடம் குற்ற உணர்வு அதிகமாக இருக்கும். தவறு செய்கிறோம் என்ற சிந்தனை அவர்களிடம் எப்போதும் இருந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போதும் கர்ப்பம் ஆகிவிடக்கூடாது என்ற பயம் இருப்பதால் மனநெருக்கடியுடனே உறவை மேற்கொள்வார்கள் கவனத்தை மீறி கர்ப்பமாகிவிட்டால் கருக்கலைப்பு செய்து கொள்ளும் அடுத்த நொடியில் துவண்டவிடுவார்கள்.
திருமணம் செய்து கொள்ளும்போது ஆண் பெண் இருவருக்குமே அது ஒரு வேலி போல் இருக்கும் இதில் வேலி இல்லாததால் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த முடியாது. யாரும் எப்போதும் பிரிந்து இன்னொருவரோடு சேர்ந்து கொள்ளலாம் என்ற நிலை இருப்பதால் இருவரும் அவநம்பிக்கையுடனே ஒன்றாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்ணோடுதான் பார்ப்பார்கள். பாலியல் விடயங்களில் என்றுமே ஒருவித 'ஒப்பீடு' நிலையை கையாளுவார்கள்.
'எதிரிக்குகூட தெரியும் துரோகி என்றும் எவர்க்கும் துரோகிதான்'
காதலின் பரிசு.........ஆதாம் ஏவாள் காலம் தொட்டு ஆடை கட்டி மறைத்து அந்த இரகசியத்தை – அன்பே உன்னை மனதார நம்பி உளமாரப் பகிர்கிறேன்.
உண்மைக் காதல் உள்ளங்கள் தம்முள் பரிமாறிக்கொள்ளும் அன்புப்பரிசு – காமம்
நம்பிக்கை விசுவாசத்துடன் பரிமாறிக்கொள்ளப்படும் காமமானது காதலிற்கோர் மிகை நிரப்பியாகும் - எனினும் காமம் மட்டும் தனியே பிரித்தெடுத்துப் பரிமாறப் பழகிக் கொண்டதால் நம்பிக்கை விசுவாசம் என்பன யாவும் தகர்ந்து போர்விட்ட உண்மைத் தன்மையற்ற உறவுகளைக் கொண்ட குடும்பம் அல்லாத அன்னிய கலாச்சாரத்தின் விசவிதைகள் நம் மண்ணிலும் தளைவிட ஆரம்பிக்கின்றது.
கற்பு.....கன்னியரை காவல் வைத்து காத்தலில் பயனில்லை – அவர்தம் கற்பால் தமைக்காத்தல்... போல்....
மேலைத்தேய பாணியிலான வாழ்க்கையில் இணைந்திருந்த பெண்கள், புதிதாக இன்னொருவரை திருமணம் செய்துகொள்ளும் போது புதிய கணவருக்கு உறவில் புதுமை இருக்காது. பெண்ணுக்கு உறுப்பு நெகிழ்ச்சி அதிகமாக இருக்கும். கன்னிச் சவ்வு இழப்பும் ஏற்பட்டிருக்கும். இது புதிய வாழக்கையை சிக்கலுக்குள்ளாக்கிவிடும். மேலும் மேலும் ஒரு விசவட்டத்துள்ளேயே பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும்....
இவ்வாழ்க்கை முறையில் இருக்கும் ஆண்களுக்கு பாலியல் பிரச்சனைகள் அதிகமாகவும் பெண்களுக்கு மன உளைச்சலும், குற்ற உணர்வும் தோன்றி அவர்கள் எதிர்கால வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியை இட்டுக் கொள்ளும் வாய்ப்பு மிக மிக அதிகம்.
முள்........ உ.....அழகான பறவையைக் காணும்போது – கடவுள் அவன் தான் நல்ல ஓவியன் அழகான பறவையுடன் பேசும்போது – கடவுள் அவன் தான் நல்ல இசையமைப்பாளன் அழகான பறவையின் பரிசம் - கடவும் அவன் தான் நல்ல சிற்பி இது ........ அழகான பறவை எது முள் எது என்று உணரும் வரை...........அழகான முள்ளில் சிக்கும்; போது – கடவுள் அவன் தான் கெட்ட துரோகிஅழகான பறவையுடன் பேசும்போது – கடவுள் அவன் தான் நல்ல இசையமைப்பாளன் அழகான பறவையின் பரிசம் - கடவுள் அவன் தான் நல்ல சிற்பி இது.......... அழகான பறவை எது முள் எது என்று உணரும் வரை.........அழகான முள்ளில் சிக்கும்போது – கடவுள் அவன் தான் கெட்ட துரோகி அழகான முள்ளில் சிக்கி உழரும்போது – கடவுள் அவன் தான் கேவலமான போக்கிரி மெய்யான காதல் தோற்கும்போது – கடவுள் அவன் தான் உண்மை எதிரி மிதவைக் காதல் தோற்கும்போது – கடவுள் அவன் தான் நல்ல ஆபத்துக்கால உதவி அழகான முள்ளில் சிக்கி உழன்று மீளும்வரை கடவுள் அவன்தான் உண்மைக் கடவுள் என்று உணராது காதல் தேடும் போதையுள்ளம்......
மென்புணர்வு உயிர் வேறு உள்ளம் வேறு உடல் மட்டும் புணர்வதில் யாதுமில்லை
ஒரு மனிதனுக்கு மனைவியுடன் அடிக்கடி மோதல் ஏற்பட்டது தன் குருவிடம் சென்று முறையிட்டான். ஒவ்வொரு வார்த்தையையும் உளப்பூர்வமாக புரிய முயற்சிசெய் என்றார் குரு சிலமாதங்கள் கழித்து வந்தான். எல்லாம் சரியாகிவிட்டன என்றான் குரு சொன்னார் இது போதாது இனி அவர்கள் பேசாத வார்த்தைகளையும் புரிந்துகொள்ளத் தொடங்கு வாழ்க்கை சொர்க்கமாகும். சொல்லப்படாதவற்றை புரிந்து கொள்வதிலேயே உறவுகள் உறுதிபெறும்.
ஊடல் போதும் காதல் சிற்றுண்டிக்கு ஊடல் சுவையூட்டி – எனினும் ஏற்ற சுவையூட்டி ஏற்ற அளவில் இல்லையெனில்.....
ஊடல்.....இதன் அளவை மீறும்போது மோதல் உண்டாகின்றது. இதன் கால அளவு நீடிக்குமாயின், துணையின் தேவை குறைந்த போகின்ற நிலை உருவாகின்றதுடன் பிரிவினை சகிக்கின்ற தன்மை உருவாகும். இதனால் மீண்டம் நட்பை உருவாக்கும் எண்ணம் குறைவடைவதுடன் தீய விடயங்களை அசைபோட மனம் பழகிக்கொள்ள எத்தணிக்கும்.
மோதலின் பின் காதல் உருவாகலாம் - ஆனால் காதலின் பின் மோதல் உருவாகின்.... அது கருதத்தக்களவு ஆரோக்கியமான விடயம் அல்ல
காதலி இவள்;..........உண்மைக் காதலியாயின் உன்னைக் காக்க தன்னுயிர் கொடுப்பாள் - ஆனால் காதல்விட்டு காதல் மாறும் பெண்ணோ தன்னைக் காக்க உன்னுயிர் பறிப்பான்
ஓர் அரசன் ஓர் சோதனைக்காக இரு மனிதர்களை தெரிவுசெய்தான். முதலாமவர் மனைவி தன் முன்னைய காதலரை வேண்டாம் என்று கைவிட்டு விட்டு இந் நபருடன் வாழ்பவர். இரண்டாமவர் மனைவி அவரையே காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்.
இருவருக்கும் அரசன் கோழி ஒவ்வொன்றைக் கொடுத்து அவர்களை அதை சமையல் செய்து மனைவியர்க்கு கொடுக்கும்படியும் கொடுக்கும்போது அரண்மனையில் திருடிய வான்கோழி என்று கூறும்படியும் சொன்னான். இருவரும் சொன்னபடியே செய்தனர்...
முதலாமவர் மனைவியே அரசனிடம் ஓடோடி வந்தாள் எனது கணவன் ஒரு கள்வன் என்று சொல்லிக்கொண்டு. இரண்டாமவர் மனைவியே பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு இரவோடு இரவாக நாட்டைவிட்டு வெளியேறிவிடுவோம் வாருங்கள் என்று கணவனுடன் மூட்டை முடிச்சுகளுடன் புறப்படலானால்.
நவீன உலகம் ஆதியில் வானரமாக இருக்கையில் நம்முன்னோர் மரம் தாவினர் – ஆனால் நவீன யுகத்தில் மனிதன் மரம் தாவவில்லை மனிதனையே தாவுகிறான்
மேலைத்தேய பாணியிலான வாழ்க்கைமுறையின் தோற்றுவாய் அமெரிக்கா என்றே கூறவேண்டும். இது சுமார் 40 வருடங்கட்கு முன்பு அங்கு அறிமுகமானது அவ்வேளையில் 20மூ ஜோடிகள் இவ்வாழ்க்கை முறையை கடைப்பிடித்தனர். எனினும் 2000ம் ஆண்டில் மெக்சிக்கோ பல்கலைக்கழகம் நடாத்திய ஆய்வுக் கற்கையில் இளைஞர்கள் 66மூ மும், யுவதிகள் 61.3மூ இவ்வாழ்க்கை முறை சரியானது என்ற எண்ணக்கருவை கொண்டிருந்தனர்.
இவ்வாழ்க்கை முறையை வாழ்பவர்கள் சுயாதீனமாக தெரிவுசெய்யப்பட்டு அவர்கள் அவதானக் கற்கைக்கு உள்ளாக்கப்பட்டபோது குறிப்பாக ஐந்து வருடங்களின் பின் கிட்டத்தட்ட 20மூ ஐ அண்டிய சதவீதத்தினரே இவ்வாழ்க்கை முறையை தொடர்ந்தும் நடத்திச் சென்றனர். 40மூ இற்கு அண்மித்தோர் பிரிந்து தனியாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மிகுதியானவர்கள் தாம் நிரந்தரமாகவே குடும்ப வாழ்வுக்குள் சென்றுவிட்டனர்.
எனினும் இவர்களின் குழந்தைகளின் குணாதிசயங்கள் மிகவும் வன்முறை மீது ஈர்வை கொண்டதாகவே அடைந்து காணப்பட்டது.
நீர்க்குமிழி உறவுகள் சேர்ந்து வாழ்வது அன்றேல் பிரிந்து போவது கூட்டணியில் சேராதே அக்கூட்டணியில் எல்லோரும் அரசியல்வாதிகள் தான் இன்னும் கவனி – உன்னில் பழம் தின்றுவிட்டு கிளையில் காலால் உதைத்துவிட்டு எச்சமிட்டு விட்டு எழுந்து பறந்து விடுவார்கள்.
இன்றைய இளைஞர்கள், யுவதிகள் பெருமளவில் தம் பொறுப்புக்களை தட்டிக்கழிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாகவே உள்ளனர். இதன் பலித விளைவுகளில் ஒன்றாக திருமணம் பொறுப்புமிக்கது என்ற எண்ணம் இவர்களின் ஆழ் மனதில் ஓர் இமாலயச் செறிவில் வலுவாக படிவடைந்து விட்டது. இதனால் திருமணத்தை (குடும்ப வாழ்வை) தட்டிக்கழித்துக் கொள்ள எத்தணிக்கின்றனர் எனினும் அவர்களது பாலியல் தேவைகளை பூர்த்திசெய்ய வேண்டிய வலுக்கட்டாயமாக நிர்ப்பந்திக்கப்படுவதால் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் அதே சிந்தனையுள்ள ஆணும் பெண்ணும் கலந்துபேசி இத்தகைய மேலைத்தேய பாணியிலான வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்கின்றனர்.
இவர்கள் தனியாக வாழும்போது ஒவ்வொருவருக்கும் அதிக பணம் செலவாகும். இந்த வாழ்க்கை முறையில் இணைந்து ஒன்றாக செலவை பகிர்ந்து கொள்கின்றனர். இவர்கள் ஒரே இடத்தில் வேலை பார்ப்பது வரை ஒரே வீட்டில் இணைந்திருப்பார்கள். யாராவது ஒருவர் பிரிந்து அடுத்த ஊருக்கு செல்லும்போது அங்கு இன்னொரு ஜோடியை சேர்த்துக் கொள்ளும் நிலை ஏற்படும்.
இந்த மாதிரி வாழ்பவர்கள் மனதில் நம்பிக்கையும் நிம்மதியும் இருக்காது. திருமண பந்தத்தில் இவர்கள் இணைக்கப்படாததால் இவர்கள் திருமண பந்தத்தில் இணைக்கப்பட்டாலும்கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அன்பு, தியாகம், விட்டுக்கொடுப்பு போன்றவை இம்மியளவும் இவர்களிடம் இருக்கவே இருக்காது. இத்தகைய உறவுகளால் நாட்டில் கொலை தற்கொலை, மனோரீதியான பாதிப்புகள் அதிகரிக்கும். இதனால் இளைய தலைமுறை இதில் சிக்கிக்கொள்ளாமல் தவிர்த்துக்கொள்வது வேண்டும்.
முள்......... கவனம் காதல் தேடி அப்பாவிப் பூவென்று அலைந்து திரிகின்ற முட்களில் மாட்டிக்கொள்ளும் இளசுகள் காதல் தேடும் அப்பாவிப் பூக்கள் அனுபவம் மிக்க வண்டுகளின் பசிக்கு இறையாகி வாடி வீழ்கின்றன
வெய்யில் கொடுமை தாங்கவில்லை என்று சேய் எலி தன் தாய் எலியிடம் கெஞ்சிக் கேட்டு வெளியில் வருகின்றது. எனினும் வந்த சிலநொடியில் ஐயோ காப்பாற்று அம்மா என்று கூறிக்கொண்டு புற்றில் நுளைகிறது. அப்போது சேய் எலி கூறியது என்ன அருமையான பிராணி பஞ்சுபோல் மேனி வெள்ளை நிறம் மட்டுமல்ல உள்ளம்கூட என்று கள்ளமில்லாமல் பூனையை பற்றிக்கூறியது. தன்னோடு நட்புக்கொள்ள நினைக்கையில் தலையில் இரத்தம் தோய்ந்த வாள் செருகிய ஒரு பிராணி கொக் கொக் என்று கூவிக் கத்தி என்னை விரட்டிவிட்டது என்றது.. அப்போது தாய் எலிகூறியது பார்வைக்கு நல்லவர்கள் போல் தீயவர்கள் இருப்பார்கள்... என்று கதையை தொடர்ந்தது.
நாற்பத்தைந்து வரை பெண்ணே,நாற்பத்தைந்தை தாண்டியதும் நாடி நரம்புகள் சோர்ந்து போகும் வேதியல் மாற்றங்கள் தீர்ந்துபோகும் மீதி வாழ்வை தொடர உண்மைத்துணை வேண்டும்
பெண்கள் இவ்வயதை அண்மிக்கையில் அவர்களின் மாதவிடாய்ச்சக்கரம் நின்றுவிடுகிறது. இதன் பின் இவர் உடல், உள ரீதியாக பல அசௌகரியங்களை உணர ஆரம்பிக்கின்றார்கள். இது Pழளவ அநnழியரளயட ளலனெசழஅந எனப்படும். உளரீதியாக,• பதற்றமடையும் தன்மை • மனதில் ஆறுதலின்மை • தூக்கமின்மை • எதிலும் கவனம் செலுத்த முடியாமை • மணதளர்ச்சி • இலகுவில் சினமுறல் • நெருக்கீட்டு தாக்கங்கள்
உடல்ரீதியாக, • அதிக களைப்பு, மூச்செறிதல் • உடல் நிறை அதிகரித்தல் • உடல் உஷ்ணமாகி இருத்தல் அத்துடன் சிலருக்கு எரிவு இருப்பதாக உணர்தல் பாலியல் ரீதியாக பெண் உறுப்பின் நெகிழ்தன்மையை குன்றல், வரட்சியடைதல் போன்றவற்றுடன் உடலுறவிற்கு தகுதியற்றவர்கள் என்ற எண்ணம் போன்றன ஏற்படுகின்றன.
விசுவாசம் - அது காதல்....உயிர்களின் புணர்ச்சி – அது விசுவாசம் உள்ளங்களின் புணர்ச்சி – அது காதல் உடல்களின் புணர்ச்சி – அது காமம்
அதிககாலம் ஒன்றாக வாழும் ஜோடிகளுள் புரிந்துணர்வு நம்பிக்கை விசுவாசம் என்பன அதிகரிப்பதால் அவர்களில் லௌகீக வாழ்வு தொடர்ந்த வண்ணமே உள்ளதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆராய்வுக் கற்கையின் முடிவுகள் கூறுகின்றன. இவர்கள் கடந்தகால அனுபவங்கள், புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு என்பவற்றின் அடிப்படையில் தமது லௌகீக வாழ்வை செப்பனிட்டுக் கொள்கின்றனர்.
நெருக்கீடு காதல் வாழ்வில் மன இறுக்கம் குறைக்கிறது மருத்துவம் சொல்கிறது – ஆனால் களவு பொய் நிறைந்த வாழ்வில் மன இறுக்கம் மிகையாகிறது நெருக்கீடு நெருப்பாகிறது....
அன்பு அன்பு என்ற வேதிப்பொருளை உடலினுள் பாய்ச்சு வார்த்தையில் செய்கையில் உண்மையில் அது உயிர்வரை சென்று அணுவணுவாய் மனிதனை அடிமை கொள்ளும்.
மனைவி............ என்றால் கற்புள்ள மனையாள் கிடைத்தல் உடலும் உயிரும் உள்ளமும் ஒரு புள்ளியில் சந்திக்கும் சுவர்க்கம்
காற்றின் சலனம் காற்றின் சலனத்திற்கு கூச்சல்போடும் இலைகள் மரத்தில் நிலைக்க மாட்டாது.
காற்று ஏதோதோ எல்லாம் சொல்கிறது என்ற காற்றுக்கு அர்த்தம் கொடுத்து மரத்தோடு சண்டை போடும் இலைகள் கடைசியில் பரிதாபம் மரத்திலிருந்த வீழ்ந்து வீனே மண்ணில் வாடிக்கிடக்கின்றன. காற்றின் கதைகளை எல்லாம் கணக்கில் எடுக்காத கிளைகள் மரத்தோடு வளர்ந்து கொண்டே போகின்றன மரம் மாழும் காலம் வரை..........
கனி தாவல்....கனிவிட்டு கனிமாறும் கிள்ளை கூட – தம் வாழ் நாளில் - காதல் ஜோடியை மாற்றுவதில்லை
மன்னிப்பு.....தவறுகள் தீட்டப்படும் போது நட்பு கட்டையாகிச் செல்லும் தவறுகள் திருத்தப்பட வேண்டியவை அன்றேல் தவறுகள் நியாயப்படுத்தப்படவேண்டியவைஅல்ல
மன்னிப்பு என்பது மறுபடி தவறு செய்யாது இருப்பதற்கு எனினும் மன்னித்ததை மறுபடி குத்திக்காட்டிக் கொள்வதற்கல்ல.
தோல்வி இல்லை.....காதல் சதுரங்கத்தில் நான் வெற்றிபெற வேண்டும் என்று நீ காய் நகர்த்துவதும் நீ வெற்றிபெற வேண்டும் என்று நான் காய் நகர்த்துவதும் இறுதியில் இருவரும் வெல்வது....
குத்திக்கொல்லும் சொல் தவிர்கோடி கோடியாய் தங்கம் கொட்டினால் கூட சமனாகாது குத்திக் கொல்லும் வார்த்தைகட்கு முள்ளிலம் (முள்ளின் மேல்) உறங்கலாம் கல்லிலும் உறங்கலாம் - ஆனால் குத்திக்கொல்லும் சொல்லின் மேலல்ல அருகிலே கூட உறங்கமுடியாது.
காதலை நேசி காதலையும் நேசிக்கக் கற்றுக்கொள் காதல்... தேர்தலில் வெற்றி பெறுவதற்கல்ல காதல்.... போரில் துன்பத்திலும் துணைநிற்க காதலில் கட்சி மாறுவது கபடித்தனம்.. காதலில் கடைசிவரை வாழ்துன்பத்தில் நீ கட்சி தாவிக்கொள்வாயாயின் - உன் புதிய கட்சிக்கும் துன்பம்???


5 comments:
அருமை:))
Can you please remove 'WORD VERIFICATION'......it makes posting comments in tamil a lil hard:)))
your Blog templates looks awesome!!!
மிக்கநன்றி
மருத்துவம் தானே படித்தேன்
இதன் முன் எனக்கு கணினி அறிவு பூச்சியம்
செயல் தொடங்கு வளம் தானே வரும்
Post a Comment