Tuesday, 10 February 2009

காதல் சதுரங்கத்தில்

...............................................................................................................

தோல்வி இல்லை.....
காதல் சதுரங்கத்தில்
நான்
வெற்றிபெற வேண்டும்
என்று
நீ காய்
நகர்த்துவதும்
நீ
வெற்றிபெற வேண்டும்
என்று
நான் காய் நகர்த்துவதும்
இறுதியில்
இருவரும் வெல்வது....

...........................................................................................................................................

குத்திக்கொல்லும் சொல் தவிர்

..................................................................................................
குத்திக்கொல்லும்

சொல் தவிர்கோடி கோடியாய்

தங்கம் கொட்டினால் கூட

சமனாகாது குத்திக் கொல்லும்

வார்த்தைகட்கு

முள்ளிலம் (முள்ளின் மேல்)

உறங்கலாம் கல்லிலும்

உறங்கலாம் - ஆனால்

குத்திக்கொல்லும் சொல்லின்

மேலல்ல

அருகிலே கூட உறங்கமுடியாது.
...................................................................................................................................................

காதலை நேசி

....................................................................................................................................................
காதலை நேசி
காதலையும் நேசிக்கக்
கற்றுக்கொள்
காதல்... தேர்தலில்
வெற்றி பெறுவதற்கல்ல
காதல்.... போரில்
துன்பத்திலும் துணைநிற்க
காதலில் கட்சி மாறுவது
கபடித்தனம்..
காதலில் கடைசிவரை வாழ்
துன்பத்தில் நீ கட்சி
தாவிக்கொள்வாயாயின் - உன்
புதிய கட்சிக்கும்
துன்பம்???
...............................................................................................................................................................................