Tuesday, 10 March 2009

காதல் ருசி.....

...................................................................................................................
காதல் .....
யாருமற்ற ஒரு புல்வெளியில்
காதலியின் அரவணைப்பு...
இலட்சம் படைவீரர் கொண்டு
காவல் செய்த
உயர் பாதுகாப்பு வலயம்.....
மனதில்......





காமத்தை அடிப்படையாகக் கொண்டு எழுகின்ற காதல் ஆகாயத்தில் உலாவும் முகில் கூட்டம் போன்றதாகவே இருக்கும். எனினும் அன்பை அடிப்படையாகக் கொண்ட காதல் மிகவும் உறுதியான அத்திவாரத்தை கொண்டதாக அமையும் தொடர்ந்து நிலைக்கும் உயிருள்ளவரை அல்ல.... உலகம் வாழும் வரை.


..................................................................................................................................................................

காதலின் பரிசு.........

..................................................................................
காதலின் பரிசு.........

ஆதாம் ஏவாள்

காலம் தொட்டு
ஆடை கட்டி மறைத்து
அந்த இரகசியத்தை –

அன்பே உன்னை

மனதார நம்பி

உளமாரப் பகிர்கிறேன்.

உண்மைக் காதல்

உள்ளங்கள் தம்முள்

பரிமாறிக்கொள்ளும்

அன்புப்பரிசு – காமம்




நம்பிக்கை விசுவாசத்துடன் பரிமாறிக்கொள்ளப்படும் காமமானது காதலிற்கோர் மிகை நிரப்பியாகும் - எனினும் காமம் மட்டும் தனியே பிரித்தெடுத்துப் பரிமாறப் பழகிக் கொண்டதால் நம்பிக்கை விசுவாசம் என்பன யாவும் தகர்ந்து போர்விட்ட உண்மைத் தன்மையற்ற உறவுகளைக் கொண்ட குடும்பம் அல்லாத அன்னிய கலாச்சாரத்தின் விசவிதைகள் நம் மண்ணிலும் தளைவிட ஆரம்பிக்கின்றது.


.....................................................................................................................................................

காதலித்துப்பார், வாழ்வெல்லாம்

............................................................................
வாலிபம்........ வாழ்வல்ல.....
காமத்தை
காதல் என்று
கனவில்கூட நினையாதே
காமம் வேறு காதல் அல்ல
காதல் ஒன்றும் அரசியலல்ல
சின்னவொரு காரணத்துக்காய்
சிறகடித்துப் பறப்பதற்கு
உன் வாலிபம்
உள்ளவரை தான் (காமத்தின்)
உன்சிறகுகள் விரியும்
வாலிபம் தீர்ந்த பின் - நீ
எண்ணும் வசந்தகாலம் ஓய்ந்திவிடும்

காதலித்துப்பார்,

வாழ்வெல்லாம் வசந்தம்

தினந்தோறும் தளிர்விடும்.....

முதுமையிலும்முந்நூறு ஆண்டு இளமை வரும்...

.........................................................................................................................................................

மேலைத்தேய பாணியிலான வாழ்க்கை முறையானது பெண்களைப் பொறுத்தமட்டில் மிகவும் எல்லைப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது. பெண்களின் பாலியல் தொடர்பான உடல் தொழிற்பாடுகள் நாற்பத்தைந்து வயதை அண்மித்த காலங்களில் எல்லைப்படுத்தப்படுகின்றது. இதனால் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஆண்துணையை தேடும் மேலைத்தேய பாணி வாழ்க்கை முற்றுப்புள்ளியை நோக்கி நகர்வதுடன் இவ்வயது எல்லையின் பின் அவர்கள் தமக்கு அன்பையும் பாதுகாப்பையும் வழங்கக்கூடிய துணையையே எதிர்பார்க்க தொடங்குகின்றார்கள். இவர்களை கவனிக்க குழந்தைகள் கூட இல்லாத நிலையிலும் இவ்வாழ்க்கை முறைக்கு பழகிப்போன ஆண்கள் இனம் யுவதிகளை நாடுவதாலும் இவ்வாழ்க்கை முறையில் வாழ்ந்த பெண்கள் குறிப்பிட்ட வயதெல்லையின் பின் தாமாகவே அனாதைகளாக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு புனர்வாழ்வு கொடுப்பதற்கு எந்த அரசிடமும் உருப்படியான திட்டம் இல்லாததால் மிகக்கொடிய வறுமையிலும் விரக்தியிலும் மீதி வாழ்வில் உழல்கின்றார்கள்.