Monday, 9 March 2009

அன்பு -உலகிற்கு தெரியாத உயரிய சீதனம்

........................................................................................

அன்பு -########

உலகிற்கு தெரியாத உயரிய சீதனம்

உலகம் விரைகிறது

மனித மூளை தடம் மாறுகிறது

பணத்தை எண்ணி

சிந்தை எரிகிறது

எண்ணம் செயல்

எல்லாம் எங்கோ தொலைகிறது

நிம்மதி நிற்காது ஓடுகிறது

மதி மயங்கி

மது கிண்ணம் தன்னில்மனிதன்

வீழ்கிறான்

அன்பை உள்ளத்தில் அல்ல

உதடுகளில் கூட காண முடியவில்லையே இந்த

புதிய உலகில்

காதல் -உலகில் அர்த்தம் மறந்த சொல் .........அறிவு மிக்க உலகுக்கு உண்மையில் அர்த்தம் தெரியாத சொல்..... அது காதல்

#####காமம் - உலகம் அதைத்தான் காதல் என்கிறது #####

.............................................................................................................................

எதிர்வாதம் செய்து ..படுதோல்வியே

................................................................................................

பொதுவாக... காதலர்கள் சிலவிடயங்களில் வெல்வதாக எண்ணிக்கொண்டு தமது உச்சவலுவைச் செலவிட்டு எதிர்வாதம் செய்வதால்.. பொதுவாக பெண்களே இந்த நிலையைக்குரியவர்கள். குறிப்பிட்ட விடயத்தில் வெற்றி பெறுகின்றனர் என்றும் ஆண்களின் மனதிலிருந்து மிக மிகத் தூரமான ஒரு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் தான் காதல் இரசாயனம் ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறிக்கொண்டு பிரிந்து கொள்கின்றனர். எல்லாவற்றுக்கும் காரணம் விட்டுக்கொடுப்பின்மையேயாகும். எதிர்வாதம் செய்து வெல்வது குறிப்பிட்ட விடயத்தில் மட்டுமே. ஆனால் வாழ்க்கையில் அவர்கட்கு படுதோல்வியே ஏற்படுகின்றது.

...........................................................................................................

கோபம் தவிர்....

....................................................................................

கோபம் தவிர்....வாலிப வயதில் காதலி கோபத்தை ரசிப்பது வழமை. 'மெல்லிய ஆண் மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது – முரடா உன்னை ரசித்தேன்' என்பது போலத்தான். இன்னும், 'கோபப்படுவதும் ஒரு தனிக்கலைதான்' என்று செல்லமாக சலித்துக்கொள்கின்ற சினேகிதியை நம்பிக் கோபத்தை ஆண்கள் வளர்த்துக் கொள்கிறார்கள். எனினும் திருமணத்தின் பின் அவரே சரியான சுடுதண்ணி எங்க வீட்டுக்காரர் என்று கவிழ்த்துவிடுவார்கள்.

...............................................................................................................................................................................

வாழ்வு அர்த்தப்படும்....

.................................................................................................................

காதல் இராஜதந்திரத்தில்

ஊடலில் தோற்றவர்

காதலில் வென்றவராவார்

தோற்றால் ஒன்றும்

குறையாது தோல்வியல்ல

அது வெ..ற்...றி அன்பை

வழங்கு அள்ளி எதுவுமே

குறையாது....காதலி..... காதலி.....

ஒன்றும் குறையாது – அப்போது

வாழ்வு அர்த்தப்படும்.......................

...........................................................................................................................................

காதலின் முக்கியத்துவத்தை காலம் தான் அறியும்.

...............................................................................

காதல் இருந்தால்.....
உன் வசந்த காலத்தில் - காமம்
பூப்பூக்கின்றது உன்
இலையுதிர் காலத்திலும் உன்னை
இறவாது காத்து நீரூற்றுகிறது
காதல் என்னும் வேர்.....





ஒர் தீவில் காதல், காமம், செல்வம், அழகு என்பன இருந்தன. ஒருநாள் அத்தீவு மூழ்கிவிடும் என்று எண்ணி படகுகளைத் தயார் செய்துகொண்டு இவை புறப்பட்டன. காதலிடம் படகில்லை செல்வத்திடம் கேட்டபோது என்னிடம் தங்கம் வெள்ளி இருக்கிறது உன்னைக் கூட்டிச்செல்ல முடியாதென்றது, அழகிடம் கேட்டபோது நீ ஈரமானவள் உன்னால் என் அழகு போய்விடும் என்றது. காமத்திடம் கேட்டபோது அதன் காதில் எதுவும் விழவில்லை கடைசியில் ஒரு படகு காதலின் அருகில் வந்து நின்றது ஏறு என்றது? அதனிடம் காதல் நீ யார்? ஏன் இவ்வளவு கரிசனை என்றது அதற்கு படகு நான்தான் காலம் என்றது. காதலின் முக்கியத்துவத்தை காலம் தான் அறியும்.

பட்டாம் பூச்சிகளின் நேசம்....???)

........................................................................................................

இரண்டு பட்டாம்பூச்சிகள் காதலித்தன. யாருக்கு மற்றவர் மீது காதல் அதிகம் என்பதில் இருவர்க்கும் போட்டி. ஒரு தடாகத்திலிருந்து தாமரையைக் காட்டி "நாளை காலை யார் இதன்மீது முதலில் அமர்கிறார்களோ அவர்களுக்குத்தான் காதல் அதிகம்" என்று தீர்மானித்தன மறுநாள் காலை தாமரை மலர்வதற்கு முன்பாகவே 'படபட' வென சிறகடித்து வந்த ஆண் பூச்சி ஆவலோடு காத்திருந்தது. தாமரை மலர்ந்து அடுத்த வினாடி அதில் அமர்ந்தது அதிர்ந்துபோனது தாமரைக்குள்ளேயே பெண்பூச்சி செத்துக்கிடந்தது. (தன் அன்பை உணர்த்தி முதல்நாள் மாலையே வந்து அமர்ந்து கொண்ட அந்த பட்டாம்பூச்சி தாமரை மூடிக்கொண்டதால் மூச்சுத்திணறி இறந்தது. அந்த பட்டாம் பூச்சிகளின் நேசம்....???)

உண்மைக் காதல்.....

.............................................................................................................................


காதலில்....
பூ வண்டு
திணைபேதம்
கிடையாது
இருவரும் பூவாய்
ஒரு செடியில்
ஒன்றாய் மலர்ந்து
ஒருவர் முகம் பார்த்து
ஒன்றாய் மடிவது.
................................................................................................................................