உன் வசந்த காலத்தில் - காமம்
பூப்பூக்கின்றது உன்
இலையுதிர் காலத்திலும் உன்னை
இறவாது காத்து நீரூற்றுகிறது
காதல் என்னும் வேர்.....
ஒர் தீவில் காதல், காமம், செல்வம், அழகு என்பன இருந்தன. ஒருநாள் அத்தீவு மூழ்கிவிடும் என்று எண்ணி படகுகளைத் தயார் செய்துகொண்டு இவை புறப்பட்டன. காதலிடம் படகில்லை செல்வத்திடம் கேட்டபோது என்னிடம் தங்கம் வெள்ளி இருக்கிறது உன்னைக் கூட்டிச்செல்ல முடியாதென்றது, அழகிடம் கேட்டபோது நீ ஈரமானவள் உன்னால் என் அழகு
போய்விடும் என்றது. காமத்திடம் கேட்டபோது அதன் காதில் எதுவும் விழவில்லை கடைசியில் ஒரு படகு காதலின் அருகில் வந்து நின்றது ஏறு என்றது? அதனிடம் காதல் நீ யார்? ஏன் இவ்வளவு கரிசனை என்றது அதற்கு படகு நான்தான் காலம் என்றது. காதலின் முக்கியத்துவத்தை காலம் தான் அறியும். 

No comments:
Post a Comment