............................................................................
வாலிபம்........ வாழ்வல்ல.....
காதல் என்று
கனவில்கூட நினையாதே
காமம் வேறு காதல் அல்ல
காதல் ஒன்றும் அரசியலல்ல
சின்னவொரு காரணத்துக்காய்
சிறகடித்துப் பறப்பதற்கு
உன் வாலிபம்
உள்ளவரை தான் (காமத்தின்)
உன்சிறகுகள் விரியும்
வாலிபம் தீர்ந்த பின் - நீ
எண்ணும் வசந்தகாலம் ஓய்ந்திவிடும்
காதலித்துப்பார்,
வாழ்வெல்லாம் வசந்தம்
தினந்தோறும் தளிர்விடும்.....
முதுமையிலும்முந்நூறு ஆண்டு இளமை வரும்...
.........................................................................................................................................................
மேலைத்தேய பாணியிலான வாழ்க்கை முறையானது பெண்களைப் பொறுத்தமட்டில் மிகவும் எல்லைப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது. பெண்களின் பாலியல் தொடர்பான உடல்
தொழிற்பாடுகள் நாற்பத்தைந்து வயதை அண்மித்த காலங்களில் எல்லைப்படுத்தப்படுகின்றது. இதனால் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஆண்துணையை தேடும் மேலைத்தேய பாணி வாழ்க்கை முற்றுப்புள்ளியை நோக்கி நகர்வதுடன் இவ்வயது எல்லையின் பின் அவர்கள் தமக்கு அன்பையும் பாதுகாப்பையும் வழங்கக்கூடிய துணையையே எதிர்பார்க்க தொடங்குகின்றார்கள். இவர்களை கவனிக்க குழந்தைகள் கூட இல்லாத நிலையிலும் இவ்வாழ்க்கை முறைக்கு பழகிப்போன ஆண்கள் இனம் யுவதிகளை நாடுவதாலும் இவ்வாழ்க்கை முறையில் வாழ்ந்த பெண்கள் குறிப்பிட்ட வயதெல்லையின் பின் தாமாகவே அனாதைகளாக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு புனர்வாழ்வு கொடுப்பதற்கு எந்த அரசிடமும் உருப்படியான திட்டம் இல்லாததால் மிகக்கொடிய வறுமையிலும் விரக்தியிலும் மீதி வாழ்வில் உழல்கின்றார்கள்.
தொழிற்பாடுகள் நாற்பத்தைந்து வயதை அண்மித்த காலங்களில் எல்லைப்படுத்தப்படுகின்றது. இதனால் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஆண்துணையை தேடும் மேலைத்தேய பாணி வாழ்க்கை முற்றுப்புள்ளியை நோக்கி நகர்வதுடன் இவ்வயது எல்லையின் பின் அவர்கள் தமக்கு அன்பையும் பாதுகாப்பையும் வழங்கக்கூடிய துணையையே எதிர்பார்க்க தொடங்குகின்றார்கள். இவர்களை கவனிக்க குழந்தைகள் கூட இல்லாத நிலையிலும் இவ்வாழ்க்கை முறைக்கு பழகிப்போன ஆண்கள் இனம் யுவதிகளை நாடுவதாலும் இவ்வாழ்க்கை முறையில் வாழ்ந்த பெண்கள் குறிப்பிட்ட வயதெல்லையின் பின் தாமாகவே அனாதைகளாக்கப்படுகின்றனர்.இவர்களுக்கு புனர்வாழ்வு கொடுப்பதற்கு எந்த அரசிடமும் உருப்படியான திட்டம் இல்லாததால் மிகக்கொடிய வறுமையிலும் விரக்தியிலும் மீதி வாழ்வில் உழல்கின்றார்கள்.


No comments:
Post a Comment